காற்றில் பறந்த பகுத்தறிவு! நல்ல நேரம் பார்த்து தொகுதி பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்!

பகுத்தறிவு குறித்து மு க ஸ்டாலின் திமுகவினரும் வாய்கிழிய பாடம் எடுப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.


ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய முடிவுகள் அனைத்துமே நல்ல நேரம் பார்த்து எடுப்பார் என்பது மறைக்கப்பட்ட உண்மை. ஸ்டாலின் மனைவி துர்கா தெய்வ நம்பிக்கை உடையவர். 

அனைத்து விஷயங்களையும் நல்ல நேரம் பார்த்து தான் செய்யச் சொல்வார். அந்த வகையில் கடந்த வியாழனன்று காங்கிரசுடன் திமுகவிற்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

உடனடியாக வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திமுக தொகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காலை 11 மணிக்கு தகுதிப் பட்டியலை தெரிந்துகொள்ள ஊடகங்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்தில் காத்திருந்தனர்.

ஆனால் 12 மணி வரை திமுக தலைவர் ஸ்டாலின் கூட அண்ணா அறிவாலயம் வரவில்லை. இதுகுறித்து கேட்டபோது தற்போது வந்துவிடுவார் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்று மட்டுமே திமுக நிர்வாகிகள் கூறி வந்தனர்.

இதன்பிறகு ஸ்டாலின் ஒருவழியாக 12 மணிக்குப் பிறகு அண்ணா அறிவாலயம் வந்தார். பிறகு 12 30 மணிக்கு மேல் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதி விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அப்போதுதான் தெரிந்தது வெள்ளிக்கிழமையான நேற்று பகல் 12 30 மணி முதல் பகல் 1 30 மணி வரைதான் நல்ல நேரம். இந்த நல்ல நேரத்தில் தான் தொகுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் கூறியதால் அதனை ஏற்ற ஸ்டாலினும் நல்ல நேரத்தில் தொகுதி பட்டியலை வெளியிட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.

பகுத்தறிவு என்பது எல்லாம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத் தானா? திமுகவினருக்கும் ஸ்டாலினுக்கும் கிடையாதா என்று இந்த செய்தியை படித்தவர்கள் கேள்வி கேட்பது நமக்கு தெரிகிறது.