சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயராகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியனின் மகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்திருக்கும் நிகழ்வு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சைதை மா.சுப்பிரமணியன் மகன் கொரோனவால் மரணம்... இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை இது. அருமைச் சகோதரர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது.
ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை - திரு. மா.சுப்பிரமணியன் அவர்களும், அவரது துணைவியார் திருமதி. காஞ்சனா சுப்பிரமணியன் அவர்களும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கொரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.
மா.சு. இணையர்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா? செல்வன் அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.