அசிங்கப்பட்டான், அவமானப்பட்டான் ஐபேக். வலைதளத்தில் வைரலாகும் ஆடியோக்களால் தலை குனியும் ஸ்டாலின்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தங்கள் கட்சிக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நபர்களை, ஊர் பிரபலங்களை இணைப்பது சகஜம்தான். பொதுவாக, தனி மனிதர்களே, கட்சியின் செயல்பாடு, தலைவரின் செயல்பாடு போன்றவற்றை பார்த்து கட்சியில் இணைவார்கள்.


ஆனால், இப்போது 300 கோடி ரூபாய்க்கு தி.மு.க.வினரால் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட ஐபேக் நிறுவனம், செல்போன் கஸ்டமர் கேர் ஆபரேட்டர் போன்று, கைக்கு வரும் எண்களுக்கு எல்லாம் போன் போட்டு, கட்சியில் சேர்வதற்கு இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் இரண்டு ஆடியோக்கள் இப்போது பொதுவெளியில் வெளியாகி ஸ்டாலினுக்கு அவமானத்தை ஏற்படுத்திவருகிறது. ஆம், ‘நீங்கள் மக்களுக்கு பொதுசேவை செய்து வருகிறீர்கள். உங்கள் சேவையை எங்கள் தலைவர் ஸ்டாலின் பாராட்டுகிறார். இனி, எங்களூக்காக கட்சியில் சேர்ந்து பணியாற்றுவீர்களா என்று கேட்கிறார் ஐபேக் நிர்வாகி.

சரி, நான் என்னவெல்லாம் பணிகள் செய்தேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்டால், எதுவும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இப்படியெல்லாம் ஆள் பிடிப்பதற்குப் பதிலாக லேகியம் விற்கலாம் என்று மற்ற கட்சிகள் கிண்டல் செய்துவருகின்றனர்.