ஸ்ரீசாயி பாபா அசைவம் சாப்பிடுவாரா… சாப்பிடச் சொல்வாரா?

சைவம், அசைவம் போன்ற பிரிவினையை ஸ்ரீசாயிபாபா எப்போதும் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. பசி தீர்க்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.


ஒரு தடவை ஒரு பக்தர், “நான் சைவ உணவு சாப்பிட மாட்டேன். அசைவ உணவுதான் வேண்டும்என்று கேட்டார். அதைக் கேட்டு பாபா  கோபப்படவில்லை. அசைவ உணவு தயாரிக்க இயலாது என்று சொல்லவில்லை. அந்த பக்தனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாமிசம் வாங்கி வரச் செய்தார். அந்த மாமிசத்துண்டுகளை சுத்தம் செய்து அசைவ உணவை தம் கைப்பட தயாரித்துக் கொடுத்தார். அவர் தயாரித்த அசைவ உணவும் பக்தர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

 சாப்பிடும் விஷயத்தில் பாபா எந்த பக்தருக்கும் எந்த கட்டுப்பாடும் விதித்ததே இல்லை. என்ன வகை உணவு பிடிக்கிறதோ, அதை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று பக்தர்களிடம் கூறுவார். சாய்பாபா தொடங்கி வைத்த உணவு வழங்கும் பழக்கம் சீரடியில் இன்றும் நடைமுறையில் உள்ளது. அனைத்து பாபா கோயில்களிலும் உணவு வழங்கப்படுகிறது. சாய் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் தங்கள் வீட்டில் உணவு சமைத்து முடித்ததும் அதை முதலில் பாபாவுக்கு படைத்த பிறகே உட்கொள்கின்றனர். இவர்களது வீடுகளில் உணவு பஞ்சம்  ஏற்பட்டதே இல்லை.