வெளிநாட்டு பெண் மண்டையை 64 துண்டுகளாக உடைத்து கொடூர கொலை! கோடீஸ்வரன் மகன் மரண தண்டனை ரத்து! உடனடி விடுதலை! அதிர்ச்சி காரணம்!

கொடூர குற்றவாளிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா மன்னிப்பு வழங்கியிருப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


2005-ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த யுவோன் ஜான்சன் என்ற பெண் சுற்றுலாவுக்கு வந்துள்ளார். இலங்கை நாட்டில் பெரும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் ஜெயமஹா. இவர் சுற்றுலாவுக்கு வந்த ஜான்சனை அடித்து கொலை செய்துள்ளார். மேலும் அவருடைய தலையை 64 துண்டுகளாக வெட்டி சிதைத்தார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்த போதிலும், உச்சநீதிமன்றமும் இதே தீர்ப்பை வழங்கியது.

இதனிடையே தனக்கு பாவமன்னிப்பு வழங்குமாறு ஜெயமஹா, அதிபர் சிறிசேனா அவர்க்ளுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் சிறிசேனா அவருடைய மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். இதனால் ஜெயமஹா இலங்கை வெலிக்கடா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் காலம் முடிவடையும் நேரத்தில் கொடூர குற்றவாளி ஒருவருக்கு சிறிசேனா மன்னிப்பு வழங்கியிருப்பது இலங்கை நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.