முஸ்லீம்களை கண்டாலே கல்வீச்சு! நள்ளிரவு தாக்குதல்கள்! இலங்கை சோகம்!

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு ‌சம்பவம் உலக மக்களை சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது.350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறைய உலக நாடுகள் இந்த நிகழ்வுக்கு கண்டணம் தெரிவித்துள்ளனர்.


கொழும்பிலுள்ள பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் முகமது ஹாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 41 ஆகும். 2 நாட்களாக அவர் வீட்டுக்கே திரும்பவில்லை. குடும்பத்தார் மிகுந்த மனக்கவலை அடைந்தனர்.எவ்வளவோ கெஞ்சியும், மசூதிக்கு தொழுகை நேரத்திற்கு மட்டும் செல்கிறாரே தவிர வீடு திரும்ப வழியில்லை.

60 வயதாகும் ஜரீனா பேகம் கண்ணீர் கலந்த பேட்டியை அளித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சரியாக தூங்கவேயில்லை. முஸ்லிம் அமைப்புகள் தான் இந்த கோர சம்பவத்திற்கு காரணம் என்பதால் உள்ளூர் மக்கள் முஸ்லீம்கள் மீது கோபத்தில் இருப்பார்கள்" என்று சொல்லும்போதே, அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது.

மேலும் அவர் கூறுகையில், 'கைக் குழந்தையுடன் தேவாலயம் வந்தவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அல்லாஹ் என்றும் இதுபோன்ற தாக்குதலில் நடத்தியவர்கள், நிச்சயமாக ஒரு தூய இஸ்லாமியனாக இருக்க இயலாது என்றும் கூறினார். எங்கள் வீட்டின் மீது கூட கற்கள் வீசப்பட்டன. வெளியே வரவே எங்களுக்கு பயமாக உள்ளது' என்றார்.

இலங்கை மக்கள் தொகையில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது இஸ்லாமிய மதம். இந்துக்கள் 2-ம் இடத்திலும்,முதலிடத்தில் பவுத்தர்கள் உள்ளனர். 7 சதவீதம் அளவுக்கு கிறிஸ்தவர்கள் அங்கு உள்ளனர். இலங்கையில் முஸ்லீம்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகுவது உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது முதல் துவங்கிவிட்டது.

கடந்த பத்தாண்டுகளில் முஸ்லீம்களின் தொழில், வணிகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை இலங்கையிலுள்ள கடும்போக்கு புத்த அமைப்புகள் முன்னெடுத்ததை பார்க்க முடிந்தது. முஸ்லீம்கள் புழங்கும் இடங்களில் ஏதேனும் வர்த்தகம் செய்தாலோ அல்லது அவர்களின் உணவகங்களில் உண்டால் ஆண்மை பறிபோய்விடும் என்றெல்லாம் அப்போது கடும் பிரச்சாரங்களை முன்னெடுத்தன தீவிர வலதுசாரி பவுத்த அமைப்புகள்.

இப்போது தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.ஆகையால் பெரும்பான்மை மக்களின் கோபம் தங்கள் பக்கம் திரும்புமோ என்ற அச்சம் இலங்கைவாழ் முஸ்லீம்களுக்கு உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பெருவாரியான தலைவர்கள், நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் இது என மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய கடமை இலங்கை அரசின் தற்போதைய அத்தியாவசிய தேவையாக உள்ளது.