உடனே திருமணமாக இந்த கோவிலில் நிர்மால்ய தரிசனம் செய்தால் போதும்! எப்படி தெரியுமா?

திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம் அருகிலேயே ஸ்ரீகண்டேஸ்வரர் என்ற இடத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது.


திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் வந்து வணங்கிச் செல்லும் கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தப் கோயிலில் அதிகாலையில் நடைபெறும் நிர்மால்ய தரிசனம் விசேஷம். அதிகாலையில் நடை திறந்ததும் முதல் நாள் இறைவனுக்குப் போடப்பட்ட மாலைகளையும் பூக்களையும் எடுத்து மாற்றி சுத்தப்படுத்தும் 20 நிமிடங்கள்தான் நிர்மால்ய தரிசன நேரம். இதை தரிசிப்பதற்கு அதிகாலையிருந்தே பக்தர்கள் வந்து சேர்கிறார்கள்.

தொடர்ந்து 41 நாட்கள் இந்தக் கோவிலுக்கு வந்து நிர்மால்ய தரிசனம் கண்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல மணமாகாத பெண்கள் தொடர்ந்து 21 நாட்கள் இங்கு வந்து நிர்மால்ய தரிசனம் கண்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும் என்று சொல்லப்படுகிறது.