கூரை வீட்டை கீரை வீடாக்கி மாஸ்காட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்சாமி!

வீட்டின் தகர கூரையின் மீது சக்கரை நோயை போக்க கூடிய சிறு குறிஞ்சான் கீரையை வளர்த்து ஊரில் மாஸ் காட்டி வருகிறார் கீரை விவசாயி பால்சாமி.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் கிராமத்தில் இந்த கீரை வீடு ரொம்ப பாப்புலர். “20 வருஷமா கீரை விவசாயம் செய்து வரும் பால்சாமி, வீட்டின் கூரையை தகரத்தில் போட்டுள்ளார்.

அதை மறைக்க அழகிற்க்காக வளர்ந்த செடியாக பார்த்தவருக்கு , பின்னர் தான் தெரிய வந்துள்ளது, அது சர்க்கரை நோயை தீர்க்ககூடிய சிறு குறிஞ்சான் கீரை என்பது.  பின்னர் அதை தொடர்ந்து பொன்னாங்கன்னி, பாலக்கீரை என பல வகைகளை தனது வீட்டின் கூரை மீது வளர்த்து எடுத்துள்ளார்.

தனது கீரைகளின் மருத்துவ குணம் பற்றி பேசிய பால்சாமி, “இந்த இலையைப் பறித்து நிழலில் காயவச்சு பொடியாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் போட்டு குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும் என பல வைத்தியங்களும் கூறினார் பால்சாமி.

சர்க்கரை நோய்க்கு மாதமானால் ஆயிரம் கணக்கில் செலவழித்து ஓய்ந்து போனவர்களுக்கு இந்த மருந்து நல்ல பயன் கொடுக்கும். அதுமட்டும் அல்லாமல் வீட்டின் கூரையையே கீரை தோட்டமாக்கி பலருக்கும் முன்னுதாரணமாக பால்சாமி திகழ்ந்துவருகிறார். மேலும் இந்த கீரையை யார் வேண்டுமானாலும் வந்து பறித்துக் கொள்ளலாம்.

யாரிடமும் பால்சாமி காசு கேட்பதில்லை. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பலரும் ஆர்வத்துடன் வந்து பால்சாமியின் அனுமதி பெற்று கீரையை பறித்துச் செல்கின்றனர்.