ஒரு வவ்வாலையே வீழ்த்தி முழுதாக தின்று ஏப்பம் விட்ட சிலந்தி! காண்போரை அதிர வைக்கும் புகைப்படம்!

அமெரிக்காவில் சிலந்தியும் வௌவாலும் சண்டை போட்டு கொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த ஏணட் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் இப்பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இம்மாதம் 7-ஆம் தேதியன்று தன்னுடைய தோட்டத்தில் சில விசித்திர காட்சிகளை கண்டுள்ளார்.

தான் வேலைக்கு செல்லும் போது, சிலந்தி வௌவாலுடன் சண்டையிட்டு கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள அனைத்து விதமான சிலந்திகளும் இவருக்கு தெரியும். வேலை முடித்து வந்து வௌவாலுக்கு என்ன ஆனதோ என்ற பரிதவிப்பில் வந்து பார்த்தபோது சிலந்தியானது வௌவாலை கொன்றிருந்தது.

விலங்கியல் நிபுணர் ஒருவரிடம் ஆலோசித்த போது, அமெரிக்கா கனடா ஆகிய நாடுகளில் கருப்பு பச்சை தோட்டத்து சிலந்திகள், பச்சை தோட்டத்து சிலந்திகள் ஆகிய வினோதமான சிலந்திகளை பொதுவாக காண இயலும் என்று கூறினார்.

இந்த காட்சிகளை அவர் வீடியோ பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.