இளம் பெண்ணின் காதுக்குள் சென்று வலை பின்னிய எட்டுக்கால் பூச்சி..! டாக்டர்களையே அதிர வைத்த சம்பவம்!

சீன நாட்டை சேர்ந்த பெண் ஒருவரின் காதுக்குள் சிலந்தி தன் வலையை பின்னும் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


பொதுவாகவே பூச்சிகள் மனிதர்களின் காதுகளில் எதர்ச்சியாக நுழைந்து அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த வகையில் சிலந்தி ஒன்று சீன நாட்டை சேர்ந்த பெண் ஒருவரின் காதுகளில் புகுந்து வலையை பின்னும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வயது முதிர்ந்த சீன நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாரம்பரிய சீன மருத்துவத்திற்கான மியான்யாங் மருத்துவமனைக்குச் சென்றார். 

அந்த மருத்துவமனையில் மருத்துவர் லாடிபெலின் என்பவரை சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை பற்றி விளக்கமாகக் கூறி இருக்கிறார். அதாவது அந்த பெண், தன்னுடைய இடது காதிலிருந்து தொடர்ச்சியாக ஒருவித ஒலி, துர்நாற்றம் மற்றும் அரிப்பு ஏற்பட்டதாக மருத்துவரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட அந்த மருத்துவர் உடனடியாக அந்தப் பெண்ணின் காதை சோதனை செய்து இருக்கிறார். அப்பொழுது அவரது கண்களுக்கு பந்து போன்ற உருவம் காணப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவர் லாடிபெலின், அந்தப் பெண்ணிற்கு ஓட்டோஸ்கோபியை பரிந்துரை செய்திருக்கிறார். ஓட்டோஸ்கோபி செய்தபோது அதனை வீடியோவாக மருத்துவர் பதிவு செய்திருக்கிறார். பரிசோதனையின் முடிவில் மருத்துவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப்பெண்ணின் இடது காதில் சிலந்தி ஒன்று வலையை பின்னி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மருந்தை காதுக்குள் செலுத்தி சிலந்தியை காதில் இருந்து அகற்றி சாமர்த்தியமாக வெளியே எடுத்தார்.

அதிர்ஷ்டவசமாக, சிலந்தியால் பெண்ணின் காது சேதமடையவில்லை. அந்த வயது முதிர்ந்த பெண் ஒரு திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் போது அது அவரது காதுக்குள் நுழைந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார். சிலந்தி ஆனது சிறிய அளவில் இருந்ததால் அந்தப் பெண்ணின் செவிப்புலன்களை தாக்கவில்லை. ஒருவேளை அந்த சிலந்தி அந்த பெண்ணின் காதையை தாக்கி இருந்தால் அவர் தன்னுடைய கேட்கும் திறனை இழந்து இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் சிலந்தியிடம் இருந்து நூலிழையில் தப்பி இருக்கிறார்  என மருத்துவர் கூறினார். இந்த செயல்பாட்டின் போது எடுக்கப்பட்ட பயங்கரமான காட்சிகள் தற்போது சீன ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.‌