துடிக்க வைத்த காதுவலி! பஞ்ச் Budsஐ உள்ளே விட்டு பார்த்த இளைஞர்! வெளியே வந்ததை பார்த்து மயங்கி விழுந்த இளைஞன்!

பிரிட்டன் நாட்டில் இளைஞர் ஒருவரின் காதுகளில் சிலந்தி தஞ்சம் புகுந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் கென்ட் நகரம் அமைந்துள்ளது. இங்கு லியம் கோமஸ் என்ற 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமையன்று மாலையில் வேலையை முடித்தவுடன் வீடு திரும்பிய போது, வீட்டில் நிறைய சிலந்திகள் இருப்பதை கண்டு அசௌகரியமாக உணர்ந்துள்ளார்.

பின்னர் சிலந்திகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார். முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு உறங்கிய, லியமுக்கு காலை எழுந்தவுடன் பயங்கரமான வலியும், காதடைப்பும் ஏற்பட்டது.

இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டார். பின்னால் காது குடையும் பட்ஸ்  உபயோகித்து காதை குடைந்தார். அப்போது அவருடைய பட்ஸில் சிலந்தியின் கால் வந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நன்றாக குடைந்த போது சிலந்தியை முழுவதுமாக வெளியே எடுத்துள்ளார். பின்னர் காது வலியிலிருந்து முழுவதுமாக விடைபெற்ற லியம், தூங்கும்போது இயர்மஃப் அணிந்துகொண்டு தூங்குகிறார். 

இந்த செய்தியானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.