சோனியா அருண்குமார்! தமிழக பாஜகவினரின் தூக்கத்தை கெடுத்தவர்!

தமிழக பாஜகவினர் தற்போது தூக்கம் இல்லாமல் தவித்து வருவதற்கு காரணம் இந்த சோனியா அருண்குமார்.


சோனியா அருண்குமார் துவக்கத்தில் செய்தியாளராக இருந்தவர். இவர் புதிய தலைமுறை நியூஸ் 7 ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தியாளராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் அளவிற்கு பாஜகவினர் சூடாகி உள்ளனர்.

இதற்கு காரணம் சோனியா அருண்குமார் ட்விட்டர் பக்கம் தான். பாஜகவின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் நேற்று பிரதமர் மோடி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தேர்தல் அறிக்கையை செம்மையாக கலாய்த்தும் விமர்சித்தும் சோனியா அருண்குமார் ட்வீட் செய்து வருகிறார். இந்த ட்விட் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரால் ரீட்வீட் செய்யப்படுகிறது. இதனால் சோனியா அருண்குமாருக்கு எதிராக பாஜக வினர் ஆபாச அர்ச்சனைகளை துவக்கியுள்ளனர்.

ஆனால் அதனைக் எல்லாம் பொருட்படுத்தாமல் சோனியா தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். இதனால் சோனியாவின் ட்விட்டர் பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தை உடைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.