ஓட்டலுக்கு சென்ற தாய் - தந்தை..! சப்ளையராக வந்து நின்ற வெளிநாட்டு என்ஜினியர் மகன்! பிறகு அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்! வைரல் வீடியோ உள்ளே!

ஒரு வருடம் கழித்து தாயை பார்க்க வரும் மகன் வெயிட்டர் வேடத்தில் வந்து அசத்திய வீடியோ தற்போது சமூக வலைதைளங்களில் வைரலாகி வருகிறது.


ஒரு தனியார் உணவு விடுதியில் ஒரு குடும்பம் சாப்பிடுவதற்காக வந்துள்ளது. அப்போது என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பதற்காக அங்கு ஒரு வெயிட்டர் வந்து மெனு கார்டை நீட்டுகிறார். அந்த மெனு கார்டை குடும்பத் தலைவர் வாங்கி பார்க்கிறார். அந்த வெயிட்டரை குடும்பத் தலைவி பார்த்து ஏதோ யோசிக்கிறார். அந்த வெயிட்டரை உற்றுநோக்கி எங்கோ பார்த்தது போல் உள்ளதே என உற்றுநோக்கி கவனிக்கிறார்.

பின்னர் அது தன்னுடைய மகன் போல் இருப்பதை உணர்ந்த அந்தத் தாய் உடனே கண்டுபிடித்துவிடுகிறார். இதை பார்த்த அந்த வெயிட்டராக வந்த இளைஞர் ஆனந்தத்தில் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார். உடனே, அந்த அம்மா தன் மகனின் பெயரைச் சொல்லி அழைக்கிறார். அதன் பின்னரே அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த இளைஞரை திரும்பிப் பார்க்கின்றனர். பின்னர் அனைவரும் அந்த இளைஞரிடம் குறும்புத் தனத்தோடு சண்டை போடுகின்றனர்.

ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்த அந்த இளைஞர், தன் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக வெயிட்டராக நடித்துள்ள இந்த வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உறவுகள் அருகில் இருக்கும்போது அதன் அருமையை உணரமுடியாவிட்டாலும், குடும்பத்திற்கு உழைக்க வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போதுதான் அந்த பாசத்தின் வெளிப்பாட்டை நம்மால் உணரமுடியும்.