ஆம்புலன்சில் வந்த அந்த உடல்..! பார்த்த உடன் வீட்டில் இருந்த சிலிண்டரை வெடிக்க வைத்த ஆசிரியை..! இரண்டு மகள்களுடன் கரிக்கடையான பயங்கரம்! பதற வைக்கும் காரணம்!

மகன் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள இயலாத தாயார் சிலிண்டரை வெடிக்க வைத்து மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி என்ற இடத்தில் புகழ்பெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு அருகே அமைந்துள்ள பூலாங்குடி என்ற காலனியை சேர்ந்தவர் விஜயகௌரி. இவருடைய கணவரின் பெயர் முருகேசன். விஜயகௌரி துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றார். இவருக்கு விஜயகுமார் என்ற மகனும், விஜயபிரியா விஜயலட்சுமி என 2 மகள்களும் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் முருகேசன் இறந்துவிட்டார்.

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன்னர் விஜயகுமார் துரதிஷ்டவசமாக ஒரு விபத்தில் சிக்கினார். பின்னர் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் கடந்த 8 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளார். விஜயகௌரி வீட்டிலேயே மகனை பார்த்து கொண்டு வந்தார். 

இதனிடையே நேற்று விஜயகுமாரின் உடல்நிலை திடீரென்று மோசமாகியுள்ளது. உடனடியாக விஜயகௌரி 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வந்து விஜயகுமாரின் உடலை சுமந்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அக்கம்பக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் யாரும் விஜயகௌரி குடும்பத்தினரிடம் அதிகம் பேசிக்கொள்ளும் பழக்கம் இல்லாததால் மகன் இறப்பு குறித்து எதுவும் கேட்டறிய இயலவில்லை.

மகன் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள இயலாத விஜயகௌரி, நேற்றிரவு சுமார் 7:30 மணியளவில் தனது மகள்களுடன் வீட்டை உள்தாழிட்டு கொண்டுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த சிலிண்டரை வெடிக்க வைத்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உறவுகளே பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தன் மகன் இறந்ததை தாங்கிக்கொள்ள இயலாததால் விஜயகௌரி குடும்பத்துடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

இந்த சம்பவமானது பூலாங்குடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.