நாம் அறிந்த கோவில்களும்! அறியாத அற்புதங்களும்!

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகக் கெடாமல் அப்படியே உள்ளது.


திருவல்லிக்கேணி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது..

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கிறது..

கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்ச வாத்ய ஒலி கேட்கிறது

தாராபுரம் ஜராவதீஸ்வரர் கோயிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் ஸரிகமபதநி என்ற இசை வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லாலான அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடைபெறுகிறது.

சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.

சுசீந்திரம் சிவன் கோயிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காது வழியாக அது வருகிறது.

செங்கம் ஊரில் உள்ள ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம் மூன்றாம் நாள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றுக்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் உள்ளது. இந்த சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். மேலே இருந்து பார்த்தால் கிணற்றில் குளிப்பது தெரியாது.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுகநாத பைரவர் கோயிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில், இந்த விதமான நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.