இந்தியாவில் உள்ள வாட்ஸப், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் பா.ஜ.க.வுக்காக பாடுபடுகிறதா! ராகுல் காந்தி ஆவேசம்!

இந்தியாவில் உள்ள வாட்ஸப், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கும் விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.


இதற்கு பதில் கொடுத்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ‘நேர்மை மற்றும் துல்லியத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் எங்கள் நடைமுறைகளை தொடர்ந்து தணிக்கைக்கு உட்படுத்தி வருகிறோம். கட்சி சார்பாக நாங்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிப்பது இல்லை’ என்று உறுதிபட தெரிவித்துள்ளது.

ஆனாலும், காங்கிரஸ் சார்பில் ஏராளமான பதிவுகள் ஆதாரபூர்வமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களைத் தாக்குவதும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தூண்டிவிட்டு வன்முறைக்கு வழி காட்டுவதுமான பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்துத்தான் ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், இதற்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தனது ட்விட்டர் பதிவில் "மக்களிடம் மட்டுமல்லாமல் சொந்த கட்சியினரிடம் கூட தோற்றுப்போனவர்கள், மொத்த உலகத்தையும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸால் கட்டுப்படுத்தப்படுவதாக கூச்சலிடுகிறார்கள். நீங்கள் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விஷயத்தில் கையும் களவுமாகச் சிக்கினீர்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

இதிலேயும் சண்டையை ஆரம்பிச்சுட்டாங்கப்பா.