சமூக விலகலை பின்பற்றி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம்! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்ற மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகல் கையாளப்பட்டது .


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது 500க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதன் காரணமாக இன்று இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோசியல் டிஸ்டன்ஸிங் என்று அழைக்கப்படும் சமூக விலகலை கையாண்டால் கொரோனா நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மத்திய அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆனால் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற சுய ஊரடங்கை பெரும்பாலான மக்கள் பின்பற்றாமல் இருந்ததால் இந்திய பிரதமர் மோடி வருத்தமடைந்தார்.

இந்நிலையில் சமூக விலகலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒவ்வொரு அமைச்சருக்கும் இடையே நீண்ட இடைவெளி விடப்பட்டது. மேலும் டேபிள் ஏதும் போடப்படாமல் தனித்தனியாக நாற்காலி அமைக்கப்பட்டு கூட்டமானது நடைபெற்றது. சமூக விலகளை உணர்த்தும் வகையில் இருந்த இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.