குடம் குடமாய் கொட்டும் பால்! தேன்கனிக்கோட்டை வேப்ப மரத்தில் அதிசயம்! கூட்டம் கூட்டமாக திரளும் பெண்கள்!

வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் சம்பவமானது தேன்கனிக்கோட்டை பகுதிக்கு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள அண்ணியாளம் கிராமத்தில் அரசமரம் வேப்ப மரங்களுக்கு நடுவே நாகர் சிலைகளை வைத்து மக்கள் பூஜை செய்து வருகின்றனர். நாகரின் அருளால் நேற்று காலை அந்த வேப்ப மரத்திலிருந்து பால் வடிய தொடங்கியது.

இதனை பார்த்த மக்கள் பரவசமடைந்தனர். உடனடியாக அந்த வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி, விளக்கேற்றி பூஜை மற்றும் வழிபாடுகளை செய்தனர். பெண்களை அந்த வேப்ப மரத்தை மற்றொரு தெய்வம் போன்று பாவித்து வழிபட்டனர்.

இந்த சம்பவம் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் மக்கள் விரைந்து சென்று அந்த வேப்பமரத்தை தரிசித்தனர். இந்த சம்பவமானது அப்பகுதிகளில் பரவி வருவதால், நாகர் அருள்பெற்ற வேப்பமரத்தை வணங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த சம்பவமானது தேன்கனிக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது