குளியல் அறைக்குள் கண்ணாடிவிரியன்..! பிடித்து சாக்குப் பையில் போட்ட பிறகு நடந்து அந்த மாதிரி சம்பவம்! கோவை பகீர்!

கோவையில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு 35 குட்டிகளை ஈன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவையில் கோவில் மேடு திலகர் வீதி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மனோகரன் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டில் இருக்கும் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து மனோகர் வசித்து வரும் அதே பகுதியில் பாம்பு பிடி தொழிலை பல ஆண்டுகளாக செய்துவரும் முரளி என்பவருக்கு தகவல் அளித்து இருக்கிறார்.

தகவலறிந்த முரளி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்ற முரளி தன்னுடைய கையில் வைத்திருந்த சாக்கு பையில் மனோகர் வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு கொண்டுவந்தார். பின்னர் அவரது வீட்டிலிருந்து பிடிபட்ட பாம்பினை அருகில் இருக்கும் வனப்பகுதியில் விட்டு விடலாம் என்று ஆலோசனை செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் அந்தப் பாம்பினை வனப்பகுதியில் விடுவதற்கு முன்பாகவே அங்கு மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது முரளி பிடித்த அந்த பாம்பு பிடிபட்ட ஒரு மணி நேரத்திற்கு உள்ளேயே தொடர்ந்து பல குட்டிகளை ஈன்றெடுத்த ஆரம்பித்திருக்கிறது. பாம்பு குட்டி போடுவதை பார்த்த முரளி ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருந்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து இந்த பாம்பை பிடித்து வைத்திருந்த பையை ஓரமாக வைத்துவிட்டு பொறுமையாக காத்திருந்து இருக்கிறார். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு அந்த கண்ணாடி விரியன் பாம்பு 35 குட்டிகளை ஈன்று எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பாம்பினையும் அதனுடைய 35 குட்டிகளையும் பத்திரமாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் விட்டு விடலாம் என்று ஆலோசனை செய்து உள்ளனர்.

இந்த குட்டி போடும் இனத்தை சேர்ந்த கண்ணாடி விரியன் பாம்பு இந்தியாவிலேயே மிகக் கொடிய விஷத்தை கொண்ட பாம்பு என்று பாம்பு பிடி தொழிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வரும் முரளி கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.