முதலில் என்னுடன்..! இப்போது என் அப்பாவுடன்..! தமன்னா குறித்து வாரிசு நடிகர் கூறிய பகீர் தகவல்! அதிர்ந்த ரசிகர்கள்!

வரலாற்று அடிப்படையில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.


ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி ஆவார். அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’சைரா நரசிம்மா ரெட்டி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது . இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடித்துள்ளார்.

தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா என பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்றையதினம் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது குறித்து மகிழ்ச்சி அடைவதாக சந்திப்பில் பேசிய நடிகர் மற்றும் சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரன் கூறியிருந்தார். சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பேசிய ராம்சரன் , இந்த திரைப்படத்தின் கதையை என்னப்பா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக கேட்டார் ஆனால் தற்போதுதான் அந்த படத்தில் வெற்றிகரமாக நடித்து உள்ளார் என்பது மிகவும் சந்தோஷமான ஒன்று எனவும் என்னுடைய அப்பா ஆசைப்பட்டது போலவே தமன்னாவுடன் அவர் நடித்துள்ளார் எனவும் கூறியிருந்தார்.

முதலில் என்னுடன் நடித்த நடிகை தமன்னா தற்போது நான் என் அப்பாவுடன் நடிப்பது குறித்து மிகவும் பெருமைப்படுவதாக நடிகர் ராம்சரண் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.