இதுவரை எத்தனை பேருடன் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளீர்கள் என்று கேட்ட ஒருவருக்கு சின்மயி தயக்கம் இன்றி பதில் அளித்துள்ளார்.
இதுவரை எத்தனை பேருடன் செக்ஸ்! வெளிப்படையாக சொன்ன சின்மயி!

பாடல் ஆசிரியர்
வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் புகார் கூறியது முதலே பாடகி சின்மயி தினமும்
ட்விட்டரில் யாருடனாவது சண்டை போடும் சூழல் நிலவுகிறது. மேலும் யாரேனும் ஒருவர்
சின்மயியை சீண்டுவதும் அதற்கு பதில் அளிப்பதுமாகவே சின்மயியின் பொழுது போய்க்
கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட
வைரமுத்து மற்றும் ராதாரவிக்கு எதிராக ஏன் தற்போது வரை எந்த புகாரும் அளிக்கவில்லை
என்று வழக்கறிஞர் என்று கூறிக் கொண்ட நபர் ஒருவர் சின்மயியிடம் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு உடனடியாக
சின்மயி பதில் அளித்தார்.
அதாவது அவர்கள் இருவருமே உண்மை கண்டறியும்
சோதனைக்கு தயாரா? என்று தான் ஆரம்பம் முதலே கேட்டு வருவதாக சின்மயி கூறியுள்ளார்.
அப்படி வைரமுத்துவும், ராதாரிவியும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என்றால்
உண்மை வெளிவந்துவிடும் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
இந்த பதிலால் அந்த வழக்கறிஞர் சாந்தம்
அடையவில்லை. மாறாக அப்படி என்றால் இதுவரை நீங்கள் ஒரே ஒரு நபருடன் தான் செக்ஸ்
வைத்துக் கொண்டுள்ளீர்களா? அதை நாங்கள் எப்படி நம்புவது என்று பதில் கேள்வி
எழுப்பினார்.
இந்த கேள்விக்கும் சற்றும் தயங்காமல் சின்மயி
பதில் அளித்துள்ளார். இதுவரை தான் தனது கணவர் ராகுலுடன் மட்டும் தான் செக்ஸ்
வைத்துக் கொண்டிருப்பதாக சின்மயி கூறியுள்ளார். அப்படி உங்களுக்கு சந்தேகம்
என்றால் நீங்கள் ஆம்பள தான் என்றால் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு
செய்யுங்கள். நான் பங்கேற்க தயார் என்று பதில் அளித்துள்ளார் சின்மயி.
இதுவரை எத்தனை பேருடன் செக்ஸ் என்கிற மோசமான கேள்வியை கூட துணிச்சலாக எதிர்கொண்டு அதற்கு சரியான பதில் அளித்த சின்மயியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.