நடிகர் சிம்பு என்னை ஏமாற்றிவிட்டார்! நடிகை காதல் சந்தியா கதறல்!

காதல் சந்தியா


நடிகர் சிம்பு தன்னை ஏமாற்றிவிட்டதாக காதல் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை சந்தியா பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

   கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் – சந்தியா ஜோடியாக நடித்திருப்பர். தமிழ் திரையுலகில் டிரென்ட் செட்டிங்காக அமைந்த படம் இது. இந்த படம் வெளியான பிறகு ஹீரோயினாக நடித்த சந்தியாவை காதல் சந்தியா என்றே அழைக்க ஆரம்பித்தனர். அவரும் தனது பெயரை காதல் சந்தியா என்று மாற்றிக் கொண்டார். காதல் வெற்றிக்கு பிறகு சந்தியாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.

  ஜீவா, லாரன்ஸ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார் சந்தியா. நடிகர் சிம்புவும் கூட சந்தியாவை விட்டு வைக்கவில்லை. தனது வல்லவன் படத்தில் சந்தியாவை நடிக்க வைத்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு தான் சந்தியாவிற்கு மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. பெரிய ஹீரோக்கள் யாரும் சந்தியாவுடன் நடிக்க முன்வரவில்லை. பின்னர் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தும் சந்தியாவால் இழந்த மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை.

  யா யா என்கிற படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாகும் அளவிற்கு சந்தியா மார்க்கெட் டவுன் ஆனது. பின்னர் மலையாளப்படங்களிலும் வாய்ப்பு குறைந்தது. இதனால் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சந்தியா இறங்கி வந்தார். தற்போது மலையாளப்படங்களில் கெஸ்ட் ரோல் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

   அப்போது வல்லவன் படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று சந்தியா கூறியுள்ளார். என்னை சிம்பு முழுக்க முழுக்க ஏமாற்றிவிட்டார். படத்தின் கதையை கூறும் போது எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தது. படப்பிடிப்பின் போது கூட என்னிடம் கூறியது போலத்தான் காட்சிகள் இருந்தன. ஆனால் எடிடிட் முடிந்து பார்த்த போது தான் நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. நான் உயிரைக் கொடுத்து நடித்த காட்சிகளை சிம்பு வெட்டி வீசிவிட்டார்.

   இதனால் தான் வல்லவன் படத்தில் நான் ஒரு சைட் ஆக்ட்ரஸ் போல் தெரிந்தேன்.  அதன் பிறகு எனக்கு கதாநாயகி வாய்ப்பு குறைந்துவிட்டது. சிம்பு என்னிடம் கூறியதை செய்யாமல் அவர் இஷ்டத்திற்கு செய்ததால் தான் என் வாழ்க்கை மாறிவிட்டது. அந்த வகையில் சிம்பு என்னை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும் இவ்வாறு காதல் சந்தியா கூறியுள்ளார்.