ரூ.125 கோடி பட்ஜெட்டில் மகா மாநாடு! கதை, இயக்கம், தயாரிப்பு அனைத்தும் சிம்பு! வெளியானது அதிரடி அறிவிப்பு!

நடிகர் சிம்பு "மகா மாநாடு" என்னும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் . மேலும் இந்த திரைப்படத்தை நடிகர் சிம்பு தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது .


சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் , வி ஹவுஸ்  ப்ரோடக்சன்  சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்கவிருந்த "மாநாடு" திரைப்படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால்  கைவிடப்பட்டது . 

ஒரு சிலர் நடிகர் சிம்பு பல்வேறு காரணங்களால் படப்பிடிப்புக்கு உரிய நேரத்திற்கு செல்லவில்லை என்றும், படப்பிடிப்பு நடத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி வந்தனர் . இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாநாடு படம் கைவிடப்படுவதாக அந்த படத்தின் தயாரிப்பாளரே  அறிவித்திருந்தார் .

இந்நிலையில் "மகா மாநாடு" என்ற தலைப்பில் புதிய படத்தை தன் சொந்த பட நிறுவனம் மூலம் சிம்பு தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது .125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்க உள்ளதாகவும் ,மேலும் இந்த படம் 5 மொழிகளில் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது . மகா மாநாடு படத்தை சிம்புவே இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.