கர்ப்பிணிகள் இருவருக்கு சாப்பிடவேண்டுமா ??

கர்ப்பம் என்று உறுதியானதுமே வீட்டில் உள்ள பெரியவர்களின் அன்புத்தொல்லை ஆரம்பமாகிவிடும். இப்போது வயிற்றுக்குள் ஓர் உயிர் வளர்கிறது, அதனால் இனி இரண்டு உயிர்களுக்கு சேர்த்து சாப்பிடவேண்டும் என்று இரண்டு மடங்கு சாப்பாடு விழுங்கச்சொல்வார்கள். உண்மையில் இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டுமா என்பதை பார்க்கலாம்.


* உடலுக்குள் இன்னொரு உயிர் வளர்வது உண்மை என்றாலும், அதற்காக இப்போது சாப்பிடுவது போல் இரண்டு மடங்கு சாப்பிடவேண்டும் என்பதில் உண்மை கிடையாது.

* இரண்டு மடங்கு உணவு எடுத்துக்கொள்வது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பிணிக்கும் தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும் என்பதுதான் உண்மை. 

*  கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் வழக்கத்தைவிட 20% அதிக உணவு எடுத்துக்கொள்வது போதுமானது. ஆனால் அனைத்து சத்துக்களும் நிரம்பிய சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

* வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து தாய்க்கு கூடுதல் கலோரிகள் தேவைப்படும் என்பதால், இப்போது சாப்பிடும் உணவுகளில் காய்கறி, புரோட்டீன் போன்றவை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தின் கடைசி மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும்போது, தாய்க்கு அதிக பசி எடுக்கலாம். அப்போது கூடுதலாக சாப்பிடலாமே தவிர, குழந்தைக்கு தேவைப்படும் என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகம் சாப்பிடுவது தேவை இல்லை.