சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங்..! இரவு ஒரு குவார்ட்டர்! ஊழியர்களை ஸ்பெசலாக கவனிக்கும் ஓனர்! என்ன வேலை தெரியுமா?

பின்னலாடை கடை உரிமையாளர் ஒருவர் தினமும் வேலை முடிந்தவுடன் குவாட்டர் வழங்கப்படும் என்று சுவரொட்டி ஒட்டிய சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை போன்ற ஆடை தயாரிப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. சமீபகாலத்தில் ஜிஎஸ்டி முதலிய பொருளாதார கொள்கைகளால் பல்வேறு திருக்குறள் பின்னலாடை நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஆகையால் இது போன்ற நிறுவனங்களில் பணியாளர்கள் குறைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் பின்னலாடை நிறுவன உரிமையாளர் ஒருவர் வினோதமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிய வரும் பேட்லாக் துணி தைப்பவர்களுக்கு மதிய நேரத்தில் ஒரு கட்டிங்கும், இரவு வேலை முடிந்தவுடன் குவாட்டர் மற்றும் தேநீருக்கு காசு கொடுக்கப்படும் என்று சுவரொட்டியின் மூலம் விளம்பரபடுத்தியிருந்தார். 

இந்த விளம்பரமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌. இதுகுறித்து அவர் கூறிய ஆடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "பின்னலாடை நிறுவனம் நட்த்தி வருகிறேன்‌. கடந்த 6 மாதங்களாக பணியாளர்கள் வேண்டும் என்று விளம்பரபடுத்தினேன். ஆனால்  எந்தவித பயனுமில்லை. 

இந்த விளம்பரத்தை சுவரொட்டிகளில் அச்சிட்ட பிறகு சில மணிநேரத்திற்குள் ஏகப்பட்ட பேர் வேலைக்கு விண்ணப்பத்தினர்" என்று கூறியுள்ளார். இந்த சுவரொட்டியானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.