வேலூரில் போட்டி எடப்பாடிக்கும் உதயநிதிக்கும்தான் டீட்டெய்ல்டு ஆய்வு ரிப்போர்ட்

நேற்றோடு வேலூர் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது.


மேடைகளும் அரிதாரங்களும் கலைக்கப்பட்டு விட்டன.அனேகமாக இப்போது காசுக் கணக்குப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் இரண்டு தரப்பும்.அதிமுகவால் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட பிஜேபி தவிர ஒவ்வொருவருக்கும் வித விதமான கவலைகள் இருக்கும்.பாராளுமன்றத்தில் ஒபிஎஸ் ஜூனியர் முத்தலாக் தடைச் சட்டத்தை  ஆதரித்து பேசியதும்,மேலவையில் நவநீதக் கிருஷ்ணன் எதிர்த்து பேசியதும் டெல்லியில் ஒரு விதமாகவும் , வேலூரில் வேறு விதமாகவும் புரிந்து கொள்ளப்படும்.

அது ஈபிஎஸுக்கு லாபமா ஒபிஎஸ்க்கு லாபமா என்பது ரிசல்ட்டை பொறுத்தது.திமுக தரப்பில் இஸ்லாமியர்களுடன் பேச்சு வர்த்தை நடத்த இருந்த கல்யாண மண்டபத்துக்கு சீல் வைத்து அரசு ஊழியர்களும் தங்கள் அரசியல் உணர்வைக் கட்டினார்கள். உதயநிதி ஸ்டாலின், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஸ்டாலின் மகன் அதோடு சினிமா பிரபலம் என்று மட்டுமே பார்க்கப்பட்டார்.இந்தத் தேர்தலில் அவர் திமுகவின் இளைஞரணித் தலைவர்.

அவர் பதவி ஏற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல்.உதயநிதி பதவி ஏற்றது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.இந்தத் தேர்தலில் முழு மூச்சாக பிரச்சாரம் செய்திருக்கிறார். உதயநிதிக்கு என்ன தெரியும்,சினிமா நடிகர்தானே என்று எடப்பாடி பதட்டத்தில் சேம்சைடு கோல் போடுமளவுக்கு உதயநிதியின் பிரச்சாரம் எடுபட்டு இருக்கிறது.

இந்தத் தேர்தலில் கதிர் ஆனந்த வென்று எம்.பி ஆவது துரை முருகனுக்கு எவளவு முக்கியமோ,அதே அளவு ஸ்டாலினுக்கும் முக்கியம்.அதிமுக ஆரம்பத்திலேயே பிஜேபி தலைவர்களை பிரச்சாரத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வேலூரில் வெற்றி பெறாவிட்டால் நமக்கு எதிர்காலமே இல்லை என்கிற தொனியிலேயே எல்லா அமைச்சர்களும் பேசினார்கள்.ஆனால்,இந்தத் தேர்தலில் அதிமுக ஜெயிக்க கூடாது என்று ஒபிஎஸ் மனதுக்குள் வேண்டி இருப்பார் என்பது நிச்சயம்.

இந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் கட்சி எடப்பாடியின் கைக்கு போய்விடும்.ஒபிஎஸ் வெளிப்படையாக ஓரங்கட்டப் படுவார்.அதனால்,இந்தத் தேர்தல் ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கையி இறுத் அத்தியாத்தை எழுதக் கூடியதாகவும் இருக்கலாம்.இந்தத் தேர்தலில் கோடிகளை இறைத்திருக்கும் கதிர் ஆனந்த் ஜெயித்தால் கூட்டத்தில் ஒருவர் அவளவுதான்.ஏ.சி சன்முகம்  ஜெயித்தால் உப்பு மற்றும் சுரங்கத்துறை போல சீந்துவாரற்ற இலாகாவில் துணை அமைச்சராவது தருவார்கள்.

ஆனால்,கதிர் ஆனந்த் தோற்றால் உதயநிதியின் பதவி கேள்விக்கு உள்ளாகும், திமுகவுக்கு பெரிய ஷாக்கெல்லாம் இருக்காது,எடப்பாடி புதிய உற்சாகம் அடைவார்,மந்திரி சபையில் கூட மாற்றம் வரலாம்.ஆனால் எசிஎஸ் தோற்றால் ஒபிஎஸ் குடும்பம் மட்டும் குதூகளிக்கும்.அதனால் இந்தத் தேர்தல், கதிர் ஆனந்த் vs ஏ.சி சண்முகம் இடையிலான தேர்தல் அல்ல,இது எடப்பாடி vs உதயநிதி இடையிலான தேர்தலே!.