3 வயதில் ஷெரீன் அப்பா பிரிந்து சென்றுவிட்டார்! அதன் பிறகு அவளை வளர்த்தது அவர் தான்! தாயார் வெளியிட்ட சீக்ரெட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் திறமையான போட்டியாளராக விளங்கிவரும் ஷெரினின் மோசமான குழந்தை பருவத்தை இந்த செய்தியில் காண்போம்.


பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் மிகவும் பக்குவமான போட்டியாளர்களில் ஷெரீனும் ஒருவர். சென்ற வாரங்களில் பிக்பாஸ் போட்டியாளர்களின் முக்கியமான உறவினர்களும் நண்பர்களும் வந்து அனைவரையும் ஊக்கப்படுத்தி சென்றதை நாம் பார்த்தோம். அவ்வாறு நடிகை ஷெரீனுக்கு அவருடைய தாயும் மற்றும் தோழியும் வந்திருந்தனர். ஃப்ரீஸ்-டாஸ்கில் இருந்தபோது இந்த சம்பவமானது நிகழ்ந்தது.

அங்கு நிகழ்ந்தவற்றை பற்றி ஷெரினின் சித்தி சமூகவலைத்தளங்களில் கூறியுள்ளார். ஷெரினின் தாயாரும் அவளுடைய தோழியும் உள்ளே சென்று 3 மணி நேரம் இருந்துள்ளனர். மேலும் உணவு சமைத்து சாப்பிட்டு அனைவருடனும் மகிழ்ச்சியாக கலந்துரையாடியுள்ளனர். அப்போது ஷெரின் தன் தாயிடம் தன்னுடைய தந்தையைப்பற்றி கேட்டுள்ளார். அதற்கு ஷெரினின் தாயார் மழுப்பலாக பதில் கூறி விட்டு வெளியே வந்துள்ளார்.

இதற்கு அவருடைய சித்தி விளக்கமளித்துள்ளார். அதாவது ஷெரின் தன் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போது அவருடைய தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் அவர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். இருப்பினும் 3 ஆண்டுகள் ஷெரினின் தாயுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.

ஆனால் அதன்பிறகு அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு ஆண் குழந்தைக்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். உடனடியாக ஷெரினின் தாய் தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அங்கு ஷெரினை முழுவதுமாக அவருடைய சித்தி வளர்த்துள்ளார். இதற்காக அவருடைய சித்தி தன்னுடைய படிப்பையும் தியாகம் செய்துள்ளார். ஷெரினின் தாயாரும்,சித்தியும் வீட்டு வேலைகள் செய்து கூட அவரை வளர்த்துள்ளனர்.

இவ்வாறு அவருடைய சித்தி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். இந்தப்பதிவை கேட்டவுடன் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.