விக்கிரவாண்டி தொகுதியை ஜெயித்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டவர் சி.வி.சண்முகம்.
விக்கிரவாண்டியில் சண்முகம் அப்செட்! களம் இறங்கிய உடுமலை ராதாகிருஷ்ணன்!

திடீரென அவரது சகோதரி மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. இந்த மரணத்திலும் அரசியல் விளையாடுவதுதான் கொடுமை.
ஆம், இந்த மரணத்துக்கு தி.மு.க.வினரும், பா.ம.க.வினரும் வந்திருந்துஅஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், முதல்வரோ, துணை முதல்வரோ வந்து அஞ்சலி செலுத்தவில்லை.
எதிர்க்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் என திமுக புள்ளிகளும் சென்று அஞ்சலி செலுத்திய பிறகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் நேரில் வராதது சண்முகத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் வருவார்கள் என்பதாலே இறுதிச்சடங்கு தள்ளிப்போனதாம். ஆனால் யாரும் வரவில்லை. அது மட்டுமின்றி தேர்தல் வேலைகளை உடுமலை ராதாகிருஷ்ணன் மேற்பார்வை செய்வதும் சண்முகம் கவனத்துக்குக் கொண்டுவரப் பட்டதாம்.
ஏதோ ஒரு பிளானுடனே தன்னை ஓரம் கட்டுவதாக சி.வி.சண்முகம் நினைக்கிறாராம். இப்போதைக்கு கட்சியைவிட குடும்பம்தான் முக்கியம் என்று அமைதியாக இருக்கிறாராம். எந்த நேரமும் இந்தக் கோபம் வெடித்துச்சிதறலாம் என்கிறார்கள்.