மனைவியால் முகமது ஷமிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்! பிசிசிஐயால் கடைசி நேரத்தில் தப்பினார்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு அமெரிக்கா விசா தடை செய்யப்பட்டிருந்தது. இதனை அறிந்த பிசிசிஐயின் தலைமை அதிகாரி அளித்த கடிதத்தின் அடிப்படையில் ஷமியின் விசாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மீது இருந்த  பாலியல் புகாரின் காரணமாக  அமெரிக்கா செல்வதற்கான விசா முதலில் நிராகரிக்கப்பட்டது.

இதனை அறிந்த பிசிசிஐ  CEO ராகுல் ஜோரி அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஷமியின்  சாதனைகளை குறிப்பிட்டு அமெரிக்க தூதரகத்திற்கு  எழுதியிருந்தார். இதனைப் படித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஷமியின் விசாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஷமியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பாலியல் புகார்கள் அனைத்தும் நிலுவையில் உள்ள காரணத்தால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஷமியின் விசாவை நிராகரித்தனர 

பிசிசிஐயின் கடிதத்தை அடுத்து ஷமியின் விசாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு ஷமி அவரது மனைவி ஜஹான் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர.

இதனையடுத்து ஷமி மீது அவரது மனைவி பலவிதமான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. கொல்கத்தா  போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து இதன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.