பும்ராவின் மரண யார்க்கர்! தெறித்து ஓடிய ஷகிப் அல் ஹசன் ஸ்டம்ப்! வைரல் வீடியோ!

வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் ராகுல் மற்றும் 'தல' தோனி சதம் அடித்து வங்காளதேச அணியின் பந்துவீச்சாளர்களை நொறுக்கி தள்ளினர். பந்துவீச்சில் நட்சத்திர வீரரான பும்ரா பட்டையை கிளப்பினார்.


இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை பயிற்சி போட்டி நேற்று ஸோபியா மைதானத்தில் நடந்தது. இது இங்கிலாந்து நாட்டில் உள்ள கார்டிஃப் நகரில் அமைந்துள்ளது. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச தீர்மாணித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் பெரியவளில் சோபிக்கவில்லை. கேப்டன் கோலி 47 ரண்கள் எடுத்தார்.

ஆனால் அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் ராகுல் சதமடித்தார். மேலும் நம்பர்-4 இடத்தை தனதாக்கிக்கொண்டார். மேலும் உற்சாகமளிக்கும் வகையில் மகேந்திர சிங் தோனி ஆக்ரோஷமாக விளையாடி சதமடித்தார். இருவரின் வானவேடிக்கை மூலமாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 359 குவித்தது.

பின்னர் 360 என்ற இமாலய இலக்கை துரத்தி ஆட தொடங்கிய வங்காளதேச அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா மிரட்டினார். துரிதமாக பந்துவீசி கொண்டிருந்ததால் அவர்களால் எளிதில் ரண் அடிக்க இயலவில்லை. அவர்களின் தொடக்க ஆட்டக்கார்கள் 49 ரண்கள் குவித்த போது பும்ரா முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்திலேயே வங்காளதேச நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தினார். துல்லியமாக அவர் வீசிய யார்க்கர் பந்தை தாக்குபிடிக்க இயலாமல் கிளீன் போல்ட் ஆனார்.

50 ஓவர் முடிவில் 264 ரண்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரண்கள் வித்தியாசத்தில் தோற்றது. பும்ரா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 90 ரண்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.