வீட்டு பணிப்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து உல்லாசம்! இளைஞரின் விபரீத செயல்!

மும்பை அருகே வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பணிப்பெண்ணின் புகாரின் பேரில் மும்பையை அருகே உள்ள போரிவில்லியை அடுத்த கோண்டிவ்லி என்ற இடத்தைச் சேர்ந்த மங்கேஷ் குப்தா என்ற 32 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசித்து வருவவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் வீட்டில் அந்தப் பெண் மட்டும் தான் சம்பாதிக்கும் நபர் என்ற நிலையில் வேறு பணிகள் கிடைத்தால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். 

இந்நிலையில்  அந்தப் பெண்ணுக்கு வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி மங்கேஷ் குப்தா கோரை பீச் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆட்டோவில் செல்லும் வழியில் அந்தப் பெண்ணுக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்த மங்கேஷ், அந்தப் பெண் அறியாமல் அதில் போதை மருந்தைக் கலந்துகொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் மயக்க நிலைக்குச் சென்ற அந்தப் பெண்ணை கோரை பீச் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு தூக்கிச் சென்ற மங்கேஷ் குப்தா அங்கு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த நிலையில் அந்தப் பெண்ணை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் பின்னர் அந்தப்பெண்ணிடம் அந்தப் புகைப்படங்களை காட்டிய அந்த நபர் நடந்ததை வெளியில் சொன்னால் அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக மங்கேஷ் குப்தா மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அஞ்சி அந்தப் பெண் நடந்ததை எவரிடமும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில் அந்த மங்கேஷ் குப்தா மீண்டும் தனது ஆசைக்கு இணங்க அந்தப் பெண்னை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு உடன்பட விரும்பாத அந்தப் பெண் உடனடியாக காவல் துறையினரை அணுகினார். தனக்கு நேர்ந்ததை அந்தப் பெண் புகாராக எழுதிக் கொடுத்தததைத் தொடர்ந்து கடத்தல்,பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனது வீட்டில் இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதைத் தெரிந்துகொண்ட மங்கேஷ்குப்தா தலைமறைவான்  நிலையில் தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் போரிவில்லியை அடுத்த கோண்டிவ்லி என்ற இடத்தில் அந்த நபரை கைது செய்தனர்.