சென்னையில் பயங்கரம்! நடுரோட்டில் வைத்து நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்!

சென்னையில் தெரு நாயை நடுரோட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை நந்தனம் பகுதியில் கடந்த 24ம் தேதி நள்ளிரவில் நாயின் பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் நாயிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதை அவர்கள் பார்த்துள்ளனர். 

உடனடியாக அந்த நபரை பிடிக்க சிலர் முயன்றுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் ஓடி தப்பிவிட்டார். இதனை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பொதுமக்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனென்றால் தப்பி ஓடிய இளைஞர் கையோடு கொண்டு வந்த பிஸ்கட்டுகளை தெருநாய்க்கு வழங்குவது காட்சியாக பதிவாகியிருந்தது. அதன் பிறகு அந்த நாயை தன் அருகே இழுத்து இந்த இளைஞர் செய்ததை பார்த்து பலரும் மிரண்டு போய்விட்டனர். சிறிதும் இரக்கம் இன்றி நாயை அந்த இளைஞன் நடுரோட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால் வலி தாங்க முடியாமல் அந்த நாய் அலறியுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் வெளியே வந்ததும் அந்த கொடூரன் தப்பியுள்ளான். பிறகு அங்கிருந்தவர்கள் ஏற்கனவே இதே போல் நள்ளிரவில் நாயின் அலறல் சத்தம் கேட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து மேலும் பல நாட்கள் பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது தான் தெரியவந்தது அந்த இளைஞன் ஒரு சைக்கோ என்பது. நள்ளிரவு நேரத்தில் நந்தனம் பகுதிக்கு வரும் அந்த கொடூரன் நாய்களுக்கு பிஸ்கட் போட்டு கற்பழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். இதனை அடுத்து அந்த இளைஞனால் பாதிக்கப்பட்ட நாய்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பிறகு நாய் கற்பழிக்கப்பட்டது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் சிசிடிவி காட்சிகளை பெற்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நாய் மீட்கப்பட்டு , நாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தப்பி ஓடிய நபர் யார்? அவன் எங்கிருந்து வருகிறான் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.