மேட்டூர் அணை பூங்காவில் காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் காதலர்களுக்கு நேர்ந்த திடுக் சம்பவம்!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை பூங்கா முக்கியமான சுற்றுலாத்தளமாக உள்ளது.


 காதலர்களும், இளம்ஜோடிகளும் அதிகளவில் இங்கு வருகின்றனர். காலை 8 மணிக்கே கல்லூரி மாணவர்கள் , கல்லூரி செல்லாமல் ஜோடியாக இங்கு வருகின்றனர்.  பூச்செடி மறைவுகளிலும், ஆட்கள் நடமாட்டம் குறைந்த இடத்திலும் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் தங்கள் செல்போன் மற்றும் கேமராக்களில் இவற்றை படம் எடுத்துக்கொண்டு, தங்கள் இச்சைக்கு இணங்க வற்புறுத்துகின்றனர். மேலும் படத்தை வெளியிடாமல் இருக்க அவர்களிடம் உள்ள பணம், நகைகளையும் " பிளாக் மெயில்" மூலம் பறித்து செல்கின்றனர்.

  வீட்டுக்கு தெரியாமல் வருவதால்,  பயந்து பெண்களும் அவர்களது இச்சைக்கு இணங்குகின்றனர்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேட்டூர் அணை பூங்காவில் ஒரு காதல்ஜோடி இதுப்போன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டது. இதனை இருவர் படம் பிடித்தனர்.  மேலும் தாங்கள் நிருபர்கள் எனவும் பத்திரிக்கை, தொலைக்காட்சியில் வெளியிடுவதாகவும் மிரட்டி அந்த பெண்ணை தங்களுடன் உல்லாசமாக இருக்கும்படி கொடுமை செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிய அந்த பெண் பூங்கா நுழைவு வாயிலில் இருந்த காவலர்களிடம் இதுகுறித்து கூறினார். மேலும் உறவினர்கள் மூலம் மேட்டூர் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.  அங்கு வந்த போலீசார், வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கடந்த பல மாதமாக அங்கு வந்து ஆபாசமாக படம் பிடித்து மிரட்டி பணம் பறித்ததாக ஒப்புக்கொண்டனர். பிரஸ் என்ற அடையாள அட்டையை அச்சடித்து வைத்துக்கொண்டு பூங்காவில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில் விவகாரம் சற்று நுட்பமானதால், அந்த வாலிபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணை சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். நாள்தோறும் இப்பூங்காவிற்கு பள்ளி, கல்லூரி மாணவிகளை சிலர் சீருடையில் அழைத்து வந்து சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். போலீசாரும், பொதுப்பணித் துறையினரும் இனியும் மெத்தனமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பொள்ளாச்சி, பெரம்பலூர் போல மேட்டூர் அணை பூங்காவிலும் ஆபாச வீடியோ சம்பவங்கள் அரங்கேறும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்