7 வயது தமிழக சிறுவனுக்கு விமான நிலையத்தில் அடித்த அதிஷ்டம்..! ஒரே லாட்டரியில் 7 கோடி ரூபாய்க்கு அதிபதி ஆனான்..!.

துபாயில் வசித்து வரும் இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசாக விழுந்துள்ளது.


தமிழ்நாட்டை சேர்ந்தவர் கனகராஜ் ஆவார். இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பாக துபாய்க்கு குடிபெயர்ந்தார். இதனையடுத்து கடந்த 27 ஆண்டுகளாக துபாயில் உள்ள அஜ்மான் என்ற பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கனகராஜ் துபாயில் சொந்தமாக தொழில் ஒன்றை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி இந்தியா வந்திருந்தார். அப்படியாக வரும்பொழுது கனகராஜ் தன்னுடைய மகனுக்கு துபாய் டியூடி ப்ஃரி ரஃபேல் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்த லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் கனகராஜ் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக விழுந்துள்ளது. இந்த பரிசு தொகையை கனகராஜ் மற்றும் அவரது மகன் கபில் ராஜ் ஆகியோர் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட பொழுது கனகராஜ் ஏற்கனவே நான் இடம் ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். அந்த இடத்தில் தற்போது இந்த பணத்தை மூலம் அலுவலகம் ஒன்றை கட்டப் போகிறேன் என்று கூறியிருக்கிறார்.