மாயமான 91 வயது முதியவர்! வீட்டின் பிரிட்ஜில் சடலமாக மீட்கப்பட்ட பயங்கரம்! விசாரணையில் அம்பவலமான திடுக் காரணம்!

முதலாளியை கொலை செய்து பிரிட்ஜில் அடைத்து வைத்த வேலைக்காரனை கைது செய்த சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணா கோஷ்லா. இவருடைய வயது 91. இவருடைய மனைவியின் பெயர் சரோஜா. இருவரும் முதியவர்கள் என்பதால் வீட்டில் கிஷண் என்ற பணியாளை வைத்திருந்தனர். 

திடீரென்று கிருஷ்ணா காணாமல் போனதாக சரோஜா காவல் நிலையத்தில் புகாரளித்தார். கிஷன் சனிக்கிழமை இரவன்று கிருஷ்ணனுக்கும், சரோஜாவுக்கும் மயக்க மருந்து கொடுத்துள்ளான். இருவரும் மயக்கமடைந்ததை உறுதி செய்த பின்னர் கிஷன் வெளியே சென்றுள்ளான். 5 பேர் கொண்ட மர்ம கும்பலை வரவழைத்து கிருஷ்ணனை பயங்கரமாக தாக்கியுள்ளான். தாக்குதலை தாங்க இயலாமல் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் உயிரிழந்தார்.

பின்னர் அவருடைய உடலை யாருக்கும் தெரியாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளான். கிருஷ்ணனின் வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குளிர்சாதனப்பெட்டியில் அவருடைய உடல் இருப்பதைக்கண்டு அதிர்ந்தனர். 

கிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய போது தான் செய்த கொலையை அவன் ஒப்புக்கொண்டுள்ளான். கிருஷ்ணன் தன்னை அவதூறாக பேசியதால் தனக்கு கோபம் வந்தது என்றும், அதற்காக அவரை கொலை செய்ததாகவும் கூறியுள்ளான். கிருஷ்ணனின் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை திருடப்பட்டுள்ளதால் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.