ஈழத்தமிழ் இளைஞனுடன் காதல் மலர்ந்தது எப்படி? நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா வெளியிட்ட குளுகுளு தகவல்!

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமான நடிகை சரண்யா தன்னுடைய காதல் கணவரை பற்றி மனம் திறந்திருக்கிறார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. அறிமுகமான முதல் சீரியல் மூலமாக தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்திழுக்கும் நடிகையாக மாறினார். இதனைத்தொடர்ந்து செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் தன்னுடைய மற்றொரு பரிமாணத்தை காட்டினார்.

பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரன் என்ற மெகா தொடரிலும் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை சரண்யா தன்னுடைய காதல் கணவரை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதாவது இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமுதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அமுதன் யாழ்ப்பாணத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் . இவரது குடும்பம் தற்போது லண்டனில் வசித்து வருகிறது. பார்த்துப் பழகிய உடன் இருவருக்கும் பிடித்து விட்டதால் இருவரும் தங்களுடைய காதலை பற்றி வீட்டாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

பார்த்து பழகிய ஒரே ஒரு வருடத்தில் இவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டிருக்கின்றனர். நடிகை சரண்யாவின் கணவர் அமுதன் லண்டனில் வேலை பார்த்து வருகிறார். அதாவது அங்குள்ள பெரிய நிறுவனங்களுக்கு மண் வளம் குறித்த ஆலோசனைகளை வழங்குவதுடன் வேலையாக பார்த்து வருவதாக நடிகை சரண்யா கூறியிருக்கிறார்.

மேலும் நடிகை சரண்யா, தன்னுடைய கணவர் மிருதங்க இசைக் கலைஞராகவும் தியான கலைகள் மற்றும் யோகா விலும் நிபுணராக வலம் வருவதையும் பற்றிக் கூறி பெருமிதம் கொண்டார்.