இக்கட தேசத்தில் தான் இழுத்து போர்த்தி..! அக்கட தேசத்தில்..! சீரியல் நடிகையின் வைரல் படுக்கை அறை காட்சி வீடியோ உள்ளே..!

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் தெலுங்கு சினிமாவில் படுக்கை அறை காட்சியில் கவர்ச்சியாக நடித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பிரபல நடிகை தேவயானி நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய கோலங்கள் சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ்.‌அதன்பிறகு தென்றல் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார்.தென்றல் சீரியலில் இவர் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலை சமீபத்தில் யூடியூபில் மீண்டும் ஒளிபரப்பு செய்தார்கள். அந்த வகையில் சிரியல் நடிகை ஸ்ருதி ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தென்றல் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அவற்றுள் முக்கியமாக ஆபீஸ் மற்றும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் சீரியல்களும் அடங்கும். இவர் தற்போது அழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்னாள் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். பின்னர் தெலுங்கு ,மலையாளம் போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ருதி ராஜ் அதன் பிறகு தமிழில் காதல்.காம் மற்றும் ஜெர்ரி போன்ற திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சீரியல்களில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி ராஜ், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் மிக கவர்ச்சியாக நடித்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடெக்கடி மொகுடன்டி என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ராஜ் படுக்கையறை காட்சியில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் சீரியல் நடிகை ஸ்ருதியா இது என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.