நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் இலவசம்..! சீமான் சீரியஸ் அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கார் இலவசமாக தருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கார் இலவசமாக தரப்போவதாக சீமான் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர் நடிகர்களை அரசியலுக்கு வா என்று அழைக்கும் அவலம் தமிழ்நாட்டில் உள்ளது என்று பேசினார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வரட்டும் ஐயம் வெயிட்டிங் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் நாட்டை யார் முதலில் விரைந்து விற்பது என்பதுதான் அந்த இரண்டு கட்சிகளின் வித்தியாசம் என்று அவர் பேசினார்.

நாம் தமிழர் கட்சியின் மீது வழக்கு தொடர்பவர்களுக்கு தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் அவர்கள் மீது வழக்கு நான் தொடருவேன் என்று சீமான் அதிரடியாக கூறினார்.