என்னோட நாடு கைலாசம்..! என்னோட அதிபர் நித்தியானந்தா! அங்கு போய்விடுவேன்! சீமான் திடீர் முடிவு!

இந்திய நாட்டில் தன்னுடைய குடியுரிமை மறுக்கப்பட்டால் நித்யானந்தாவின் கைலாச நாட்டிற்கு சென்று விடுவேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக கூறியுள்ளார்.


மாநிலங்களவையிலும் மக்களவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து வட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் பலத்த போராட்டம் நிலவி வருகிறது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. 

அப்போது பேசிய சீமான் ஒருவேளை இந்திய பதிவேட்டின் படி தன்னுடைய குடியுரிமை மறுக்கப்பட்டதால் எந்த கவலையுமின்றி நித்யானந்தாவின் கைலாச நாட்டுக்கு தான் செல்ல தயாராக இருப்பதாக கூறினார். சீமான் பேசிய இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.