புல்லட் புரூஃப் ஜாக்கெட்டையும் துளைத்த துப்பாக்கி குண்டு..! ஆனால் போலீஸ்காரரை காப்பாற்றிய சாய்பாபா..!

பாதுகாப்பு படை வீரர் மீது குண்டு பாய்ந்திருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்த சம்பவமானது உத்தரபிரதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக உத்திரப்பிரதேச மாநிலத்தில் படுதீவிரமாக போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இதுவரை 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 263 காவல்துறையினர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த 4,500 பேரை காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.  அவர்களை நேற்று காவல்துறையினர் விடுவித்தனர்.

நாலாபந்த் என்னும் பகுதியில் நேற்று போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளது. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விஜேந்திரகுமார் என்பவர் மீது போராட்டக்காரர்கள் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அப்போது அவருடைய புல்லட் வெஸ்டை பிளந்துகொண்டு தோட்டா அவருடைய மேல் பாக்கெட்டிலிருந்த பர்ஸ் மீது மோதியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் "இதை என்னுடைய மறுபிறவியாக எண்ணுகிறேன். என்னுடைய மேல் பாக்கெட்டில் இருந்த பர்ஸில் 4 ஏடிஎம் கார்டுகள், சிவன் மற்றும் சாய்பாபாவின் புகைப்படங்கள் இருந்தன. அவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.