மனித மூளையின் பல ஆயிரம் ஆண்டு கால மர்மங்கள்! என்னென்ன தெரியுமா?

வேத காலத்திலிருந்தே மனம் என்பது இதயத்தில் இருப்பதாகவே கருதப்பட்டது.


விஞ்ஞானத்தினால் தான் மனமானது மூளையைச் சார்ந்தது என்ற உண்மை புரிந்தது. இன்னும் நூற்றாண்டு காலத்தில் பிரபஞ்ச உலகங்கள் பற்றிய ரகசியங்களை மனிதன் அறிய வாய்ப்புண்டு. ஆனால் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மூளை பற்றிய ரகசியங்கள் அறியமுடியாது. மயிரிழையினும் மெல்லிய கோடிக்கணக்கான நரம்புகள் மனிதனின் ஒன்றரை கிலோ மூளையில் அடைபட்டுக் கிடக்கின்றன என்பது ஆச்சரியமே.

மூளை உடலில் உள்ள உறுப்புகளோடும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இதயத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும் இரத்தத்தை, நிமிஷத்துக்கு 850 கிராம் இரத்தத்தில் உள்ள குளுகோஸையும், பிராண வாயுவையும் எடுத்துக் கொண்டு உடனே இரத்தத்தை அனுப்பி விடுகிறது. இந்த இரத்தத்தின் அளவு குறைந்தால் சோர்வும் அதிகமாகும். குறைந்தால் மயக்கமும் வரும்.

பிராண வாயுவும் குளுகோசும் மூளையின் எல்லா நரம்புகளுக்கும் சென்றால் தான் மூளை இயங்கும். எல்லோருக்குமே முழு மூளை செல் இயங்குவதில்லை. உலகத்தின் பேரறிஞர்களுக்கே மூன்று சதம் தான் மூளை இயங்குகிறது. மூளையின் எல்லா நரம்புகளும் இயங்க யோகக்கலை பயன்படும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இதற்கு சுவாசப் பயிற்சியை வேண்டும். இதயத்தைப் பக்குவப்படுத்தும் பயிற்சி தேவை. சிந்தனை ஒருநிலைப்பட வேண்டும்.

இதுபோன்ற பயிற்சிகளை இளம் வயது முதல் முயற்சித்தால் மூளையின் செல்கள் சாகாமலிருக்கும். அதனால் நோய்களை தடுக்கலாம். ஒவ்வொரு மயிர்க்காம்புக்கும் மூளைக்கும் தொடர்புள்ளது. மூளையை காப்பதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.

உலகில் ஏற்படும் வியாதிகளுக்கு மூளையின் செல்கள் பலவீனமாக இருப்பதே காரணம். மூளையின் ஒவ்வொரு பகுதியும் செல்களும் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்புடையதாக இருக்கிறது. மூளையின் செல்கள் சரியாக இருந்தால் வியாதிகள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.