மே தினம்! சென்னை உழைப்பாளர் சிலைக்கும் காமராஜருக்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

உலககெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதாம் ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது


ஆஸ்திரேலியாவில் 1856ம் ஆண்டு நடைபெற்றதுதான் முதல் தொழிலாளர் போராட்டமாக கருதப்படுகிறது. தினமும் 8 மணி நேரம் வேலை என்று கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டம் வெற்றி என்றாலும், உலகம் முழுவதும் 8 மணி நேர வேலை கடைபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1886ம் ஆண்டு மே மாதம் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த அமைதி பேரணி மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தவே 7 பேர் உயிர் இழந்தனர், 60க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

நம் இந்தியாவில் முதன் முதன்முறையாக மெரினா கடற்கரையில்தான் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. 1923ம் ஆண்டு தொழிலாளர் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு என்றென்றும் மக்கள் நினைவில் இருக்கும் வகையில் சிலை வைக்க உத்தரவிட்டவர், அன்று தமிழக முதல்வராக காமராஜர். 

இதையடுத்து  சென்னை மெரினா கடற்கரையில் 1959-ம் ஆண்டு உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. சிற்பி தேவி பிரசாத் ராய் செளத்ரிதான் இந்த சிலையை வடிவமைத்தார். 1959 ஆம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தின் அப்போதைய ஆளுநர் விஷ்ணுராம் மேதியால் இந்த உழைப்பாளர் சிலை திறந்து வைக்கப்பட்டது. உழைப்புக்கு மரியாதை கொடுத்த பெரும்தலைவர் காமராஜர்தான்.