ரஜினி மகளுக்கு ரகசியமாக 2வது திருமணம்! திருப்பதியில் ஏற்பாடு!

நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதியில் ரகசிய திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


  சவுந்தர்யாவுக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற பெயரில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சவுந்தர்யா – அஸ்வின் தம்பதி விவகாரத்து பெற்றது. தற்போது சவுந்தர்யா தனது தந்தை ரஜினி வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு தொழில் அதிபர் வனங்காமுடி என்பவரின் மகன் விசாகனை காதலிப்பதாக தகவல் வெளியானது- விசாகனும் சவுந்தர்யாவை காதலிப்பதாக கூறப்பட்டது. இந்த காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. மேலும் பிப்ரவரி மாதம் சவுந்தர்யாவுக்கும் – விசாகனுக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

  திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்று ரஜினி கூறி வந்தார். ஆனால் தனது மகளுக்கு 2வது திருமாணமாக இருந்தாலும் கிராண்டாக நடத்த வேண்டும் என்று லதா தெரிவித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ரஜினி தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கு நடைபெற்ற பஞ்சாயத்தில் திருமணத்தை எளிமையாக திருப்பதியில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது-

  இதனை தொடர்ந்து ரஜினியின் மனைவி லதா, தனது மகள் சவுந்தர்யாவுடன் திருப்பதிக்கு திடீரென சென்றார். அங்கு தான் சவுந்தர்யா – விசாகன் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது- இதனை அடுத்து திருமணத்திற்கான தேதியை கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி திருப்பதி கோவில் நிர்வாகிகளிடம் லதா பேசிவிட்டு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

  பிப்ரவரி மாதம் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில் அதற்கான தேதியை மட்டும் ரஜினி வீட்டார் ரகசியமாக வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு சென்னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ரஜினி ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது- அதற்கான ஏற்பாட்டிலும் லதா ரஜினி ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.