தமிழகத்தில் கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பெயரை அறிவித்துவிட்டன. ஆனால், ஐந்தே ஐந்து தொகுதிகள் வைத்திருக்கும் பா.ஜ.க.வால் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் பொன்.ராதாகிருஷ்ணன் என்கிறார்கள்.
ஒரு நாடாருக்குத்தான் சீட்டு, பொன்னாரை கழற்றிவிடும் பா.ஜ.க !! குஷியில் தமிழிசை!!
அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் , சிவகங்கையில் ஹெச்.ராஜா, தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன், ராமநாதபுரத்தில் கருப்பு முருகானந்தம், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பொன்னாருக்கு சீட் கிடையாது என்ற தகவல் கசிந்துள்ளது.
பா.ஜ.க.வின் ஐந்து தொகுதிகளில் இரண்டு நாடார்களை வேட்பாளர்களாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று பா.ஜ.க. முக்கியப் புள்ளிகள் சண்டை போட்டு வருகிறார்கள். அதனாலே பட்டியல் தாமதமாகிறது. இப்போது பொன்.ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வாளராக்கும் முயற்சி நடக்கிறது.
இந்தத் தகவல் தெரியவந்ததும் கொந்தளித்திருக்கும் பொன்னார்,உடனடியாக கன்னியாகுமரி தொகுதியில் தேர்தல் வேலைகளைத் தொடங்குமாறு ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனே அவருக்கு சிலர் வாக்கு சேகரிக்கத் தொடங்கவே கட்சிக்குள் உச்சபட்ச குழப்பம் நிலவுகிறது . பொன்னாருக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, நமக்கு பிரச்னை இல்லை என்று தமிழிசை சந்தோஷமாக வேலை செய்து வருகிறார்.
பொன்னாருக்கு ராஜ்யசபா சீட் என்று சொல்லி, அவரை ஏமாற்றும் வேலைகள் நடக்கிறதாம். தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சருக்கு இப்படி ஒரு நெருக்கடியா… பரிதாபம்தான்.