வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தனியார் மண்டபத்திற்கு சீல்
இஸ்லாமியர்களை சந்தித்து வாக்கு சேகரித்த ஸ்டாலின்! மண்டபத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தனியார் மண்டபத்திற்கு சீல் வட்டாட்சியர் சுஜா தலைமையிலான அதிகாரிகள் விசாரணைக்கு பின் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இஸ்லாமிய தலைவர்களுடன் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக வந்த புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக முன்கூட்டியே அனுமதி பெறவில்லை என புகார். ஸ்டாலின் ஆலோசனையை நிறைவு செய்துவிட்டு சென்ற பிறகு வந்த வட்டாட்சியர் மண்டபத்திற்கு சீல் வைத்துள்ளார். இது திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கும் முயற்சி என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
இதே போல் திமுகவினருக்கு மண்டபம் உள்ளிட்டவற்றை வாடகைக்கு கொடுத்தவர்களையும் இந்த நடவடிக்கை பகீர் அடைய வைத்துள்ளது.