இன்று சூரிய கிரகணத்திற்கு பின் கொரோனா வைரஸ் செயல் இழக்கும்..! சென்னை அணு விஞ்ஞானியின் கணிப்பு! எப்படி தெரியுமா?

வரப்போகும் சூரிய கிரகணத்திற்கு பின்பு கொரோனா வைரஸ் நிச்சயம் செயலிழக்கும் என்ற அணு விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் அடித்துக் கூறியிருப்பது தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாகவே நம்முடைய தமிழகத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் சென்னையை பொருத்தவரையில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்த வண்ணம் உள்ளது. எப்போது இந்த வைரசின் பாதிப்பு குறைய ஆரம்பிக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும் விதமாக சென்னையை சேர்ந்த பிரபல அணு விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் , கொரோனா வைரஸிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியிருக்கிறார். அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை சுந்தர் கிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார். அவரது ஆய்வின் முடிவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கு தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸிற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அதாவது சூரிய கிரகணம் பொழுது அணுப் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியால் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சூரிய கிரகணம் தோன்றியது. அந்த கிரகணத்தின் பொழுது அனைத்து கிரகங்களும் தன்னுடைய தன்மையை மறு சீரமைத்து கொண்டதாக அவர் கூறுகிறார். இந்த கிரகணத்தின் போது வெளியிடப்பட்ட ஆற்றலினால் பூமியின் வலிமையும் மறுசீரமைக்க பட்டுள்ளதாக விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் கூறுகிறார். அந்த கிரகணம் நிகழ்ந்த பொழுது ஏற்பட்ட அணு சேர்க்கை மற்றும் அணுப்பிளவு மூலம் நியூக்ளியஸ் உருவாகியிருக்கலாம். ஒருவேளை இந்த நிகழ்வின் மூலமாக கொரோனா வைரஸின் உயிர் மூலக்கூறின் கட்டமைப்பு பிறப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் கூறுகிறார்.  

மேலும் பேசிய அவர், ஒருவேளை என்னுடைய கணிப்பு சரியாக அமைந்தால் நிச்சயம் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் இந்த மாதம் (ஜூன்) 21ஆம் தேதி குறைய ஆரம்பிக்கலாம். ஏனெனில் சூரிய கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் இந்த வைரஸை அழிக்கும் வல்லமை பெற்று இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் சூரிய ஒளியும் மற்றும் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் ஆற்றல் ஆகியவை நம்மை இந்த வைரஸில் இருந்து பாதுகாக்க நிச்சயம் உதவி செய்யும் என்று விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் கூறுகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த செய்தியானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.