நான் பரீட்சை எழுதியே ஆகனும்...! முகத்தில் ஆக்சிஜன் குழாயுடன் தேர்வு அறைக்கு வந்த மாணவி! நெகிழ வைக்கும் காரணம்!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மூச்சு பிரச்சனை காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் உடன் தேர்வு எழுத சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சபியா யாதவ் என்ற சிறுமி உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவியாக வலம் வந்த இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவர் தன்னிச்சையாக சுவாசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆகவே அவர் தினமும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உடன் பொருத்தப்பட்டிருக்கும் டியூபில் மூலமாக சுவாசத்தை பெற்றுவருகிறார். இந்நிலையில் இதற்கான தீவிர சிகிச்சையும் அவருக்கு மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். பள்ளிப் படிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் அவருக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நன்றாக எழுத வேண்டுமென மிகப்பெரிய ஆசையாம்.

ஆகையால் தேர்வு அறைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் ரோடு சென்று தேர்வு எழுதுவதற்கானஅனுமதியை சபியா கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்றிருக்கிறார். அதன் அடிப்படையில் தற்போது அங்கு நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு தேர்வின்போது சபியாஆக்சிஜன் சிலிண்டர் உடன் சென்று தேர்வு எழுதும் சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டபொழுது அவருடைய மகளுக்கு பள்ளி படிப்பின் மீது மிகுந்த ஆர்வமும் எப்போதும் முதல் மாணவியாக வலம் வரும் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆகவே தனியாக அவரே பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகளின் ஒப்புதலின் அடிப்படையில் அவருக்கு தேர்வு எழுதும் அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் என் மகள் எழுதிக் கொண்டிருக்கிறார் என அவர் கூறியிருக்கிறார். விரைவில் தன்னுடைய மகளின் உடல் நலம் தேறி விடும் எனவும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.