மேற்கூரை உடைந்து ஒழுகும் அவலம்! மழை நீரில் அமர்ந்து பாடம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்! மனதை உலுக்கும் புகைப்படம்!

மேற்கூரை இடிந்து விழும் ஆபத்தான அளவில் ஊராட்சி ஒன்றிய பள்ளி இயங்கி வருவது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம் துறையூரில் சிங்களாந்தபுரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தொடக்க காலத்தில் 8 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். இந்த பள்ளியானது சரியான பராமரிப்புகளின்றி ஆபத்தான முறையில் இயங்கி வருகிறது. 

சில இடங்களில் மேற்கூரைகள் இடிந்துள்ளதால் மழை பெய்யும் போது, தண்ணீர் ஒழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் என்பதுதான் வழியில்லாததால் வகுப்பறையிலேயே மழைநீர் தேங்கி, இருக்கை மிகவும் நனைந்து மாணவர்களால் படிக்க இயலாதவாறு இருக்கிறது.

தொடக்கத்தில் 8 மாணவர்கள் மட்டும் படித்து வந்த நிலையில் தற்போது 33 மாணவர்கள் படிக்கின்றனர். அரசுப்பள்ளியில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்காக பராமரித்தால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

இந்த செய்தியானது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.