அடிக்கடி மோதல் - உடன் படித்தவனை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன் - திண்டுக்கல் திடுக்

பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்திரிக்கோலால் குத்தப்பட்டு மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. அங்க பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. ஓசூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கபில் ராகவேந்திரா. இவர் அப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு "ஏ" பிரிவில் படித்து வந்துள்ளார். இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவர்களின் அடிக்கடி தகராறுகள் ஏற்படும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன.

இதேபோன்று விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் 10-ஆம் வகுப்பு "பி" பிரிவில் படித்து வந்துள்ளார். இவருக்கும் கபில் ராகவேந்திராவிற்கும் ஒரு சில மாதங்களாகவே நிறைய வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

நேற்று வழக்கம்போல இருவரும் வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். வாக்கு வாதத்தினால் ஆத்திரமடைந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தன்னிடம் இருந்த கத்திரிக்கோலால் ராகவேந்திராவை குத்தி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே ராகவேந்திரா உயிரிழந்தார். 

தகவலறிந்த பள்ளி நிர்வாகம் பதற்றத்துடன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. காவல்துறையினர் ராகவேந்திரா கொலை வழக்கு சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.