கூரை வீட்டில் தனிமையில் வசித்து வந்த 62 வயது மூதாட்டி..! உள்ளே புகுந்து 17 வயது சிறுவன் செய்த தகாத செயல்! வேதாரண்யம் பரபரப்பு!

62 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த 17 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்‌.


கடுமையான சட்டங்களும் , தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டு வரும் போதிலும் நாட்டில் பாலியல் தொந்தரவு தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. சிறு வயதுப் பெண்களில் ஆரம்பித்து வயதானவர்கள் வரை இந்த பாலியல் தொந்தரவுகளை தங்களது அன்றாட வாழ்வில் எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வேதாரண்யம் அருகே நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து மேலக்காடு பகுதியை சேர்ந்த 62 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு  படிக்கும் ஒரு சிறுவன் 62 வயதான அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி தகவல் அறிந்த மூதாட்டியின் பாதுகாவலர் ஒருவர் அருகிலுள்ள வேட்டைக்காரனிருப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

 இதைப் பற்றி தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து 11வது படிக்கும் சிறுவனை கைது செய்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.